எல்லா பெருமையும் தமிழனுக்கே
வானம் பார்த்த
பூமியில் மானம்
காத்து வாழ
வகைசெய்தான் !!!
திரைகடல்
தாண்டியும்
திரவியம் தேட
கற்றுக்கொண்டான்!!!
உழவுத்தொழிலை
உயிரென
நினைத்தான்
உயர்நெறி கொண்ட
நூல்கள் ஆயிரம்
படைத்தான்
தாயென தமிழ்
மொழியை
கருதினான்
வீரத்திலே சிறந்து
பண்பிலே உயர்ந்து
அன்பிலே படர்ந்து
வாழ்ந்து காட்டினான்
பெருமை கொள்வோம்
தமிழனாய் பிறந்ததிற்கு
உறுதி கொள்வோம்
தமிழனாய் வாழ்வதற்கு !!!