பருவக் காற்றின் கவியரங்கம்

பருவக் காற்றின் கவியரங்கம்
பொழிந்தது தூறல் எதுகை மோனை
பா வரிகளில் பனித்தது ஈரம்
பசுவிளம் கன்னி பண்ணிசைக்க
பக்கவாத்தியம் சிணுங்கும் உயிர்கள்

தலையாட்டிய கிளைத்தருக்கள்
கால மாற்றத்தின் முதல் ரசிகைகள்
தலைமுழுக்கெடுத்த தடாகக் கோரைகளும்
பருவ மங்கையாய் நாணிய அருகமும்
துளிர்த்த மொட்டாய் விழித்தக் கமலமும்
குளிர்த்த மொழிவள பார்வையாளர்கள்

எட்டாத அலைபுரவிகள் நெஞ்சில் வெப்பச் சலனம்
கொட்டா கார்மேகத்தை கையசைத்து அழைப்புவிட
தட்டாது பொழிந்தது கவிதை மழை
சொட்ட நனைந்தது புவி கவிமேடை

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (28-Nov-18, 12:13 pm)
பார்வை : 62

மேலே