“கடற்கரைக்குச் செல்வோமா”
Amutha Porkodi Ammu
25 October ·
ஒன்றாம் வகுப்பிற்கானப் பாடம்...
“கடற்கரைக்குச் செல்வோமா”
என்ற பாடத்திற்காக நான் எழுதிய பாடல்....
அம்மா அப்பா அண்ணனுடன்
கடற்கரைக்குப் போனேனே
ஆடிப்பாடி விளையாடி அலையில்
துள்ளி குதித்தேனே
தொலைவில் தெரிந்த கப்பலைப் பார்த்து
கையை ஆட்டி மகிழ்ந்தேனே
குதிரை ஏறி குடைராட்டினம் சுற்றி
கும்மாளம் தான் போட்டேனே
மத்தளம் ஊதல் மாங்காய் பழங்கள்
சக்கரவண்டியில் கண்டேனே
அப்பளம் முறுக்கு இறால் வாங்க
அப்பா பணம் தந்தாரே
அண்ணனும் நானும் பங்கு போட்டு
பிட்டு பிட்டு தின்றோமே...!