மௌனம் பேசும் மொழி

விதவைச் சூடிய வெள்ளை

உடையின் மௌனம்
மீட்டாத வீணை

ஆர்பரிக்கும் கடலலை
மோதும்

கடற்கரையின் மௌனம்
போர்க்களம்

பூமிக்கடியில் ஓடும்

பாறைக்குழம்பின் மௌனம்
கண்ணிவெடி

இவ்வரிசையில் என் மௌனம்
புரியாத புதிராய்

எழுதியவர் : நா.சேகர் (1-Dec-18, 10:45 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : mounam pesum mozhi
பார்வை : 3134

மேலே