ஓம் நமசிவாய
மூவுலகையும் ஆளும்
முக் கண்ணணுக்கு
முதல் வணக்கம்......
முக் கண்ணணுடன்
இணைந்தே உள்ள
தேவிக்கு இரண்டாவது
வணக்கம்............
அன்னை மடி அமர்ந்த
செல்லப் பிள்ளையாருக்கு
மூன்றாவது வணக்கம்......
பல குறும்பு காட்டி
குமரனாக காட்சி
தரும் தந்தை மகனுக்கு
நாங்காவது வணக்கம்.....
வணக்கங்கள் கோடி
வந்தணங்கள் பாடி
முத்தி அறியா வயதில்
நித்திலங்கள் போற்ற
வந்தேன் உன் பாதம் நாடி....
சிவ சிவ சம்போ
சிவாய நமஹ தில்லை
நடராஐனே விந்தைகள்
பல காட்டி வல்லமை
கொடுக்கும் வல்லவனே....
கங்கையை சடையில் வைத்து
மங்கையை பாகம் வைத்து
மக்களைக் காக்கும் மகாபிரவே....
வரம் என்ற அரக்கனுக்கு
வரம் கொடுத்து கூடவே
அவன் அகங்காரம் அழிக்க
வழியும் வகுக்கும் நீல
கண்டனே.......
சிதறும் தீப்பிளம்பை
முக்கண்ணாகிய
முதல் கண்ணில் அடைக்கி
வைத்து புன்னகை மலர
அமர்ந்திருக்கும் கங்காதரரே....
ஆணும் பெண்ணும் சமம்
என்று உலகுக்கு உணர்த்திய
ஆதி பகவானே........
விந்தையான வனே
விகாரம் அழிப்பவனே
வித்தைகள் பல காட்டி
மந்தையானவனையும் காப்பவனே
ஓம் என்ற மந்திரத்திலும் சக்தியை
இறுக்கப்பிடித்து இல்லற இன்பத்தை
புரிய வைத்த வல்லவனே.....
கோடான கோடி நமஸ்காரம்
முக்கண்ணா என் குறையைத்
தீரும் ஓம் சக்தி நமசிவாயா
சிவாய நமஹ சிவாய ஓம்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
இன்பமே சூழ்க எல்லோரும்
வாழ்க நமச்சிவாயா........
அன்பான காலை வணக்கங்கள்
அன்பு உறவுகள் அனைவருக்கும்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
