உடைந்த உள்ளம்

உள்ளம் வேதனை என்னும் கல் பட்டு
உடைந்துவிட்டது கண்ணாடி போல ...
நொறுங்கியது கண்ணாடி மட்டுமல்ல
என் உள்ளமும் தான் ..
என்னதான் முயன்றாலும் உனடந்தது ஒட்டினாலும்
கீறல்கள் மறையாது ..மாறாதது...
என் உள்ளம் கூட அதுபோல தான் ....
வேதனையால் குமுறுகிறது உள்ளம்
துடிதுடித்து அழுகிறது வெம்பி சாகுகிறது...
ஏனென்றால் என் உள்ளத்துக்கு தெரியாது
''மௌனம்'' என்னும் பேசா மொழி .....
தெரிந்திருந்தால் புரிதல் இருந்திருக்கும் போல ...
ஏமாற்றத்தில் உடைந்தன உள்ளம்
நினைத்து கூட பார்க்கமுடியவில்லை
நான் ஏமாற்றப்பட்டேன் என்று ..
என் உள்ளம் அதை ஏற்றுகொள்ளமறுக்கிறது...
எவ்வளவு ஆறுதல் கிடைத்தாலும் உள்ளம்
மட்டும் ஆறுதல் அடையவில்லை ..
அவ்வளவு காயங்கள் என் உள்ளத்திற்கு
சிதையில் சிக்குண்ட மான் போல
அனலில் கொதிக்கிறது என் உள்ளம்....
இதை நீருற்றி அணைக்கவும் முடியாது
என் வாழ்நாளில் மறக்கவும் முடியாது
என்ன செய்ய உள்ளத்தின் வேதனை அவ்வளவு கொடியது ..
நான் மண்ணில் மக்குண்டாலும்
என் உள்ளத்தின் வேதனை மட்டும் காற்றில் உலாவரும் ...
நான் சிதையில் சாம்பல் ஆனாலும்
சாம்பலின் வாசமாக என் உள்ளத்தின் வேதனை வாசம்வீசும் ...!!!

எழுதியவர் : priya (30-Nov-18, 1:16 pm)
Tanglish : udaintha ullam
பார்வை : 656

மேலே