கரைந்து போன கனவுகள்

காற்றோடு கலந்த மூச்சு போல்
நீரிலே கரைந்த உப்புப் போல்
கரைந்தே போனதே நான்
கண்ட இன்பக் கனவுகள் ..../

வடிகாலில் விழுந்த மழைத் துளி போல்
சேற்றுடன் சேர்ந்த உரம் போல்
மொட்டோடு கருகிய பிஞ்சு போல்
கலைந்தே போனதே
எனது ஆசைக் கற்பனைகள் ..../

மழை கேட்டு அழும் தவளை போல்
மழை விட்ட பின் பறக்கும் ஈசல் போல்
மழை நீரோடு போகும் பூப் போல்
மனதில் நான் ஆழம் பார்க்காத ஆசை மறைந்தே போனதே இளமையிலே..../

தீ சுட்ட புண்ணாக
அனலில் விழுந்த புளுவாக
மின்சாரத்தில் மோதி
இறக்கும் விட்டில் பூச்சாக
துடிக்கின்றதே என் ஜீவன்
இறக்கும் தறுவாயிலும்
நினைக்கிறதே உன் உறவை .../

கை கோர்க்க நாள் வரும்
மாலை சூடிடவே சேதி வரும் என்று
நான் நித்தம் கண்ட கனவு
கரைந்தே போனதே கரைந்த. நீர்
கண்ணிலே நிறைந்தே ஆடுதே..../

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (1-Dec-18, 7:11 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 164

மேலே