வந்துவிடு கண்மனியே

காத்திருவென சொல்லிவிட்டு
காணாமல் போனவளுக்காக காத்திருக்கிறேன்.....
காலங்கள் பல கடந்தும் - என் பிள்ளைகளுக்கும்
பிள்ளைகளானபோதும்
பெரு முதுமையெனை
யடைந்த போதும்
காத்திருக்கிறேன்......
என் காலம் முடிவதற்குள் 
உன் திருமுகம் காட்டிவிடு
காதலுக்காக அல்ல
ஒருமுறை கண்முன்னே உனைக்காண
யார் காதிலும் ஓதப்படாத
கடைசி ஆசையொன்று
எனக்குள் என்னுயிர் பிடித்துக்
காத்திருக்கிறது.....
அது சாந்தி பெறுவதற்காக....
வந்துவிடு கண்மனியே....

எழுதியவர் : முகில் (1-Dec-18, 8:48 pm)
சேர்த்தது : முகில்
பார்வை : 351

மேலே