காவிய அழகி

உன் வெட்கம் நான் படித்த முதல் வெண்பா
உன் புன்னகை நான் வாசித்த ஒற்றை வரி திருக்குறள்
நீ தந்த கோடி முத்தம் நான் சேமித்த இரு இதழ் நூலகம்
உன் மெல்லிடை வல்லின சிறகுகள்
நான் இன்னும் கண்ணில் பார்க்காத இலக்கண குறிப்புகள்
நாலடி உன் கை பிடித்து வைத்தால்
நாலடியாரிலும் இன்னும் சிலவரிகள்
சேர்த்து விடலாகுமடி
கண்ணகி உன் சாபம் கொடு
நான் உன் கணவன் ஆகா வேண்டுமென
ஆனா நொடியில் சிலப்பதிகாரம் எழுத தொடங்கி விடுகிறேன்
ஒற்றை பாட்டு நீ பாடு பாத்து பாட்டில் இதுவும் ஒன்றாகி
தமிழில் வரலாறு படைக்கலாம் இருபதாம் நூற்றாண்டில்
தமிழில் புதிய திருப்பம் என
எல்லை இல்லா உன் அழகை
எப்படி பார்த்தாலும் தமிழின் எல்லா நூலிலும் சேர்க்க வேண்டும்

எழுதியவர் : ராஜேஷ் (3-Dec-18, 12:40 pm)
சேர்த்தது : ராஜேஷ்
Tanglish : kaaviya azhagi
பார்வை : 359

மேலே