நிக்குஞ்சு - உரையாடல் சிறுகதை
அடியே கண்மணி, அங்க வர்ற அந்த அழகான பையன் யாருடி?
@@@@
பையன் இல்ல பாட்டி. அவுருக்கு முப்பது வயசுக்கு மேல இருக்கும்.
@@@@
யாருன்னு விசாரி.
@@@@
தம்பி நீங்க யாருங்க? எங்கிருந்து வர்றீங்க? யாரைப் பாக்க வர்றீங்க?
@@@@@
இங்க யாரு காவேரி பாட்டி?
@@@@@
ஏன்டப்பா கேக்கற? நான்தான்டா காவேரி பாட்டி.
@@@@@
அய்யோ பாட்டி, எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க.
@@@@@@
உங்கப்பா யாருடா. அந்த ஆள நான் எதுக்குடா மன்னிக்கனும்?
@@@@@
சின்ன வயில கோவிச்சிட்டு பம்பாயிக்கு ஓடிப்போன உங்க கடைசி மகன் கண்ணப்பனை ஞாபகம் இருக்கா?
@@@@@
எம் மவன் கண்ணப்பனா? இப்ப நெனைச்சாலும் அழுகாச்சு வருதடா தம்பி. அவுங்க அப்பன் அடிச்சிட்டாருன்னு கோவிச்சிட்டு ஓடிப் போயிட்டான். நாங்களும் அவனத் தேடாத எடம் இல்ல. செலுத்தாத நேர்த்திக்கடன் இல்ல. அவனப் பாக்க இன்னும் துடிச்சிட்டு இருக்கிறேன்டா தம்பி
@@@@
பாட்டிம்மா உங்க மகன் கண்ணப்பனோட மகன் தான் நான்.
@@@@
அடப் பேரப் பையா, கண்ணு, சாமி வாடா. நீ என்னத் தேடிக் கண்டுபிடிச்சு வந்ததில எனக்கு ரொம்ப சந்தோசம்டா சாமி. சரி எம் மவன் ஏன் வரல?
@@@#@
பாட்டிம்மா உங்க மகன் கடந்த ரண்டு வருசமா படுத்தபடுக்கையா இருக்கிறாரு. எனக்கு எல்லா விவரத்தையும் சொல்லி உங்கள பம்பாயிக்கு அழைச்சிட்டு வரச்சொன்னாரு. உங்கள நேருல பாத்து உங்ககிட்ட அவரு செஞ்ச துரோகத்துக்கு மன்னிப்புக் கேக்கணுமாம்.
@@@
அய்யோ மவனே கண்ணப்பா!
காணாம போன நீ கோவம் தணிஞ்சு ஊட்டுக்கு திரும்பி வந்திருக்கக் கூடாதா? படுக்கையில வேற கெடக்திறயா? எஞ் சாமிக்கு என்னடா ஆச்சு பேரா?
@@@@
அவருக்கு ஒரு காலும் ஒரு கையும் செயல்படாம போயிருச்சு பாட்டி.
@@@@@
அய்யோ மவனே கண்ணப்பா! எம் பிள்ளைக்கு இந்த நிலமையா வரணும்? நான் வர்றண்டா சாமி. வர்றேன். ஏன்டா பேரப் பையா, உம் பேரு என்னடா கண்ணு?
@@@@
எங்கப்பா ஒரு தொழிலதிபர். எங்கூட பொறந்தவங்க ரண்டு பேரு. ஒரு தம்பி.ஒரு தங்கச்சி. எல்லாருக்கும் கல்யாணம் ஆகிருச்சு. எங்கம்மா குஜராத்தில பொறந்து வளந்தவங்க. அப்பாவை ஒரு பணக்கார மராத்திக்காரரு தத்து எடுத்து வளத்து படிக்க வச்சு எங்கம்மாவை கல்யாணம் பண்ணி வச்சாரு. ஒரு விபத்தில அடிபட்டுத்தான் அப்பா ரண்டு வருசமா படுக்கையில கெடக்கிறாரு. உங்களப் பிரிஞ்சு ஓடிவந்து துரோகம் செஞ்ச பாவத்துக்குத்தான் மன்னிப்புக் கேக்க உங்கள அழைச்சிட்டு வரச்சொன்னாரு.
@@@@
டேய் பேரப்பையா நான் நாட்டு மருத்துவச்சிடா. நான் அங்க வந்து மூணே மாசத்தில எம் மவன் கண்ணப்பனை எழுந்து நடமாட வச்சிடுவன்டா.
@@@@
ரொம்ப சந்தோசம் பாட்டிம்மா. நாளைக்கே பொறப்படறோம்.
@@@@
சரிடா பேரா. உம் பேரச் சொல்லுடா.
@@@@
என்னை அப்பா பம்பாயில தமிழர்கள் நடத்தும் பள்ளில படிக்க வச்சதுனால நான் தமிழை நல்லாக் கத்துட்டேன். கல்லூரிப் படிப்பையெல்லாம் முடிச்சபின்பு அப்பாவோட தொழிற்சாலையிலே வேலைக்குச் சேர்ந்தேன். அப்பாவுக்கு ஏற்பட்ட விபத்துக்கப்பறம் நாந்தான் எல்லாத்தையும் கவனிச்சுக்கிறேன். நிர்வாக இயக்குனரா இருக்கிறேன். ஓ.... எம் பேரக் கேட்டீங்களே! எம் பேரு நிகுஞ்ஜ். குஜராத்திப் பேரு.
@@@@
என்னடா பேரு இந்தப் பேரு. நிக்குஞ்சு. நிக்காத குஞ்சு. கோழிக்குஞ்சு வாத்துக்குஞ்சுன்னும் பேரு வைக்கறாங்களா அங்கே.
@@@@
பாட்டிம்மா எம் பேருக்கு நல்ல நல்ல அர்த்தம் எல்லாம் இருக்குது. நான் அதை அப்பறம் சொல்லறேன். எனக்குப் பசிக்குது.
@@@
வாடாக் கண்ணு உனக்கு சோறு போட்டு மீனுக் கொழம்பு ஊத்தி பெசஞ்சு ஊட்டிவிடறேன்.
@@@@
பாட்டி எனக்கு வயசு முப்பத்தஞ்சு. உங்க கொள்ளுப் பேரனும் கொள்ளுப் பேத்தியும் உயர்நிலைப் பள்ளில படிக்கிறாங்க. நீங்க எனக்கு ஊட்டிவிட வேண்டாம். நாளைக்குப் பொறப்படத் தயாராகுங்க.
■■■■■■■■■■■■■■■■◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
Nikunj = bower, bird's nest, garden