அவ பேரு நாக்கு
யாருடி அவ? அரை முதுகைக் காட்டிட்டு நடிகை மாதிரி ரவிக்கை போட்டுட்டு திரியறா?
@@@@
பாட்டிம்மா அவ சென்னையில பொறந்து வளந்தவளாம். நம்ம தெருவு கடைசி வீட்டு குப்பமாரித் தாத்தா பேத்தி செல்வியோட தோழியாம். நம்ம ஊரு திருவிழாவைப் பாக்க அவ வந்திருக்கிறா.
@@@@
ஓ... பட்டணத்துப் பாப்பாவா? அதுதான் அவளப் பாத்தாவே தெரியுதே. அவ பேரு என்ன?
@@@#
அவ பேரு என்னடி கலை?
@@@@
அவ பேரு ரஸ்னா.
@@@@
என்னது ரசனாவா? நம்ம பொட்டிக் கடைல விக்கறாங்களா அந்தப் பொடியா? அவ இந்தி பேசறவளா?
@@@
ரசனா இல்லங்க பாட்டிம்மா. ரஸ்னா. அவ தமிழ்ப் பொண்ணுதான். அவளோட அப்பா தமிழ்ப் பேராசிரியர். இப்பெல்லாம் தமிழை வளர்க்க வேண்டியவங்களே திரை ரசனையினால அவுங்க பிள்ளைங்களுக்கு வேறமொழிப் பேருங்களத்தான் வைக்கிறாங்க. அதுதான் தற்கால தமிழர் நாகரிகம்.
@@@@
கலிகாலம்டி கலை. தாய்மொழியை நாமலே மதிக்கில்லனா மத்த மொழிக்காரங்க நம்மள மதிப்பாங்களா? சரி அதவிடு. அவ பேருக்கு என்ன அர்த்தம்?
@@#@@
நான் அவ பேரத் தெரிஞ்ச ஒடனே வலைத்தளத்தில அவ பேருக்கான அர்த்தத்தைக் கண்டுபிடிச்சுட்டேன் பாட்டி. ரஸ்னாங்கற பேருக்கு ரண்டு அர்த்தம் இருக்குது.
@@@@
அதச் சீக்கிரம் சொல்லடி கலை.
@@@
ஒரு அர்த்தம் நாக்கு. இன்னோரு அர்த்தம்..... அய்யோ. மறந்திட்டேன் பாட்டி. நாளைக்குச் சொல்லறேன்.
@@@
'நாக்கு'ன்னு பேரா? என்னடி அநியாயம் இது? 'நாக்கு'ன்னெல்லாம் பேரு வைக்கிறதா.
@@@@@
அந்த நாக்குப் பொண்ணு பேருக்குத் தகுந்த மாதிரி சரியான வாயாடியாம். அவகிட்ட சாக்கிரதையா இருங்க.
@@@@
நான் ஏன்டி அவகிட்ட பேசப்போறேன். பேரு ஆராய்ச்சி பண்ணறதில நான் ஆர்வமா இருக்கிறத அவகிட்ட யாராவது சொன்னா அவ என்னக் கிண்டல் பண்ண வந்தாலும் வருவா. அவ எங்கிட்ட வந்தா நாக்கப்புடுங்கற மாதிரி எதாவது பேசி வெரட்டிடுவேன். நான் சின்னத்தாயா கொக்கா?
@@@@@
??????
■■■■■■■■■■■■■■■◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
Rasna = tongue or ray.