தமிழே தமிழே
தரணி கண்ட முதல் மொழி
பரணி பாடிய பழம்பெரும் மொழி
தழுவி பிறந்த மொழிகள் ஏராளம் தனித்துவமான இலக்கியங்கள் தாராளம்
கல்வெட்டு சுமந்த தமிழ் பெருமை
காலம் தோறும் நிற்கும் நிலைமை
பார் வியக்கும் பண்பாடு படைத்தாய்
வேர் போல நம்மில் ஊன்றினாய்
செருக்கு அற்ற செம்மொழி இம்மொழி
இதற்கு மிஞ்சிய மொழி எம்மொழி ?
இவ்வுலகை ஆள பிறந்த மொழி
இயற்கை இயற்றிய இன்னிசை மொழியாம் தமிழ் மொழியே!