காதல் வாசனை

ஆண் :-
புது தூறல் சிந்துதே என் தூக்கம் சென்றதே
உன் தூண்டில் கண்களில் என் இதயம் தொங்குதே
அடி அழகே ஒரு வார்த்தை பேசு அதுபோதும்
உன்னை அணைத்தே சாகத்தோன்றும் எப்போதும் எப்போதும்

பெண் :-
இந்த வானம் சொந்தம்மாச்சி உன்னில் நானும் சேர்ந்தபோது
இங்கு தேனும் பாய்ச்சலாச்சி உன்னை நானும் பார்த்தபோது
இரவில் வெளிச்சம் தந்தாய் நீ நிலவின் மகனாய் நின்றாய்
இதழில் பரீட்சை எழுதி எந்தன் இதயம் வென்று சென்றாய்

ஆண் :-
ஒரு தொடர்கதை எழுதியே
உன்னில் தொலைகிறேன் அழகியே
நான் தொடும் நேரம் வரும்போது
ஏன் செல்கிறாய் விலகியே

பெண் :-
நீ தொட்டால் நான் மலர்கிறேன்
நீ சென்றாய் நான் அழுகிறேன்
தொடாமல் தொட்டு என்னை மெதுவாய் தட்டு

அப்துல் பாக்கி. க

எழுதியவர் : (3-Dec-18, 9:30 pm)
சேர்த்தது : ABDUL BACKI
Tanglish : kaadhal vasanai
பார்வை : 203

மேலே