ஒரு தலைக் காதல்

புணர்ந்தும் புணரமாலும் விலகிச்
சென்ற எண்ணங்களின் உயிர்
மெய் எழுத்துக் கள்.
விடுப்பட்ட எழுத்துக் களுக்கு
இடையே வந்து சேர்ந்தன
மெய் எழுத்துக் கள்.
காதலின் பரிதவிப் பை
உயிர் எழுத்துக்கள் மட்டும்
நிறை கொள்ள வில்லை.
இது உரைநடை என்று
புலம்பிக் கொண்ட அது
மன தின் அழகு.
அவள் கண்களை நேர்
நோக்க துணிவு அற்ற
உனது காதல் ஒருதலை.
அவள் கையை சேர
வரிகள் இல்லை என்பது
உனக்கு என்றும் இழுக்கு.
நீ கிணற்றுத் தவளையென்று
அவள் போனப் பாதையை
நின்று புன்னகைத்து மனம்.