கடை வீதியில் ஒரு புத்தகக் கடை

கடை வீதியில் ஒரு புத்தகக் கடை
மூடிக் கிடந்தது
வாங்குவார் இல்லையாம் !
தேடிப்பிடித்தேன் சொந்தக்காரனை
திறந்து பார்த்தேன்
கரையான் கபளீகரம் செய்த காகிதத் துகள்களை
இலக்கிய அழிவுகளாய்...!!!
மீட்டெடுத்தேன் உ வே சா தாசன்
ஒரு கம்பனை ஒரு ஷேக்ஸ்பியரை
ஒரு ஷெல்லியை கீட்ஸை ஒரு வோர்ட்ஸ் வொர்த்தை
ஒரு பாரதியை ஒரு பாரதி தாசனை !

எழுதியவர் : கல்பனா பாரதி (5-Dec-18, 10:05 am)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 303

மேலே