இன்னொரு புயலாகிவிடுமோ
வாழ்வில் புயல்
வீசியபோதெல்லாம்
வரவில்லை தெருவுக்கு,
வருத்தத்துடன்
வாழ்வைக் கழித்தோம்
வீட்டுக்குள்..
இன்று,
வந்த புயலால்
வசிப்பிடமே போனபோது,
வந்துவிட்டோம்
ஒன்றாய்த் தெருவுக்கு..
விழுந்த மரங்களைத்
தூக்கிவிட்டார்கள்,
விழுந்த எங்கள்
வாழ்வே கேள்விக்குறியானது..
தூக்கிவிட வருவோரை
எதிர்பார்க்கும் எங்கள்
ஏக்கப் பெருமூச்சு
இன்னொரு புயலாகிவிடுமோ...!

