ஆவணக்கொலை

அறியற்ற சமூகம்
அளவற்ற சாதி வெறியால்
அரங்கேற்றும் அவலம் இது.
ஆதிக்க சாதி
அடக்க நினைக்கும் சம நீதி -அதுவே
ஆவணக்கொலை எனும் அநீதி.

இணைந்த இரு இதயங்கள்
இறந்து போவதா?
தூக்கி வளர்ந்த பிள்ளையை
துடிக்க துடிக்க கொல்வதா?

சாதியை -
இரத்தம் கொண்டு
சுத்தம் செய்கிறான்
மனிதம் மாண்டு போக
புனிதம் பூசிகிறான்.

பிறப்பு தரும் சாதிக்கு
இறப்பு தருவோம்
வரப்பு வைத்து பிரித்தது போதும்
சிறப்பு வாய்ந்த சமுகத்தை தாரும் .

எழுதியவர் : பிரதீப் CK (6-Dec-18, 12:42 pm)
சேர்த்தது : CK Pradeep
பார்வை : 293

மேலே