பெண் நிலை மாறுமோ

இறைவா...

பெண்ணென்ற  உயிரை ஏன் படைத்தாய்...?

வெறும் இச்சைக்காக படைத்தாயா..?
இல்லை
இன்பமாக வாழ படைத்தாயா..?

அவள் அறிவை போற்றும் நூறு குரல்கள் கேட்டாலும்..
அவள் அந்தரங்களை பேசும் ஆயிரம் குரல்கள் ஒலிக்கின்றதே..

அவளை பாராட்டி பரிசு தரும் நூறு கரங்கள் இருந்தாலும்..
பலாத்காரம் செய்ய ஆயிரம் கரங்கள் காத்துக்கிடக்கின்றதே..

கற்ப்பை இழந்து கதறி அழுகிறாள்..
இரவில் ஏன் வந்தாயோ..?
இப்போது இழந்துவிட்டாயோ..?
என்று ஏசுகிறது சமூகம்..

இது தெரிந்திருந்தால்
தாயின் கருவறை இருளுக்குள்ளேயே
ஒவ்வொரு பெண்ணும் முடங்கி கிடந்திருப்பாளே..!

பதவி ஏற்கப் போனவள்
பரிகொடுத்து தவிக்கிறாள்..

விடுதியில் தங்கியவள்
வியாபாரமாகிறாள்..

இது பெண்ணின் சாபமா..?

கடவுளொன்று இருக்குமாயின்
ஏன் காப்பாற்ற வரவில்லை..?

பெண்ணின் நிலை எப்போது மாறும்..?

எழுதியவர் : கலா பாரதி (6-Dec-18, 2:52 pm)
சேர்த்தது : கலா பாரதி
Tanglish : pen nilai maarumo
பார்வை : 911

மேலே