கீதமாய் உன் குரல்

என்றும் ஒலிக்கும் உன்
குரலின் ஓசை இனிக்கும்
நாதமாக என் ஜீவனுக்குள்!

துடிக்கும் இதயம் நின்று போனாலும் துள்ளிக்கொண்டு
ஒலிக்கும் உன் குரலின் கீதம் இதயதுடிப்பாக!

நீ
எப்பொழுதோ பேசி போன
வார்த்தைகள் இன்றும்
தேனாய் இனிக்கிறது எனக்குள்ளே!

மறுமுறை என்று எப்போது பேசப்போகின்றோம் என்று எண்ணிக்கொண்டு நாட்களை கழிக்கின்றேன்!

எழுதியவர் : சுதாவி (7-Dec-18, 7:29 pm)
சேர்த்தது : சுதாவி
Tanglish : keethamaay un kural
பார்வை : 1202

மேலே