இன்றும் நான்என்றும் நான்

காலங்கள் உருண்டோடி விட்டன...
நாம் காதலித்த நாட்களின் நினைவுகள்
இன்றும் மனதில் இன்ப நெருடலாய்...

கண நேரம் கூட காக்க
பொறுமையில்லாதவள் நீ
ஊடலில் நீ அடம் பிடித்தாலும்
கூடலில் கைதேர்ந்தவள் நீ...
செல்ல சிணுங்கலில் எனை
சிறையிலிட்டவள் நீ....

என்னை கட்டிப் போட்ட உன்
அதட்டலும் காதல் கண் உருட்டலும்
இன்று நினைத்தாலும் அழியா
காதல் ஓவியங்கள்...

நீ கேட்டுக் கொண்டபடி என் முகநூல்
அத்தியாயத்தை முடிவு செய்து விட்டேன்
ஆனால் என் காதல் மனதை அல்ல...
நீ பாடி அனுப்பிய பாடல் இன்றுமென்
மனதை கொள்ளை கொள்ளாமிலல்ல...

அன்பே...

எட்டாத தேசத்தில் நீ இருந்தாலும் உன்
பட்டான இதயம் கவர்ந்த நாயகன் என
கட்டான இறுமாப்பில் இன்றும் நான்.....
என்றும் நான்.....

எழுதியவர் : ஜெய் ரெட்டி (7-Dec-18, 6:54 pm)
சேர்த்தது : ஜெய் ரெட்டி
பார்வை : 142

மேலே