கன்னியாகுமரி----------------------- ஜெயமோகன்-நாவல்--------------- வாசிப்பு – ------------கடிதம்

இந்நாவல் மானுட துக்கத்தையும் வலியையும் முன்வைப்பது. மாறுதல்கள் அனைத்தும், வளர்ச்சிகள் கூட, இழப்புகளையும் வலிகளையும் உருவாக்குகின்றன. எந்த அமுதகடலும் கடையப்பட்டால் விஷயத்தையே உமிழும்போலும். நமது வாழ்வின் அலைகளில் ஒன்றில் உருவான ஒரு மிடறு விஷமும், அமுதமும், உதிரமும் இந்நாவலில் உள்ளது. இதன் எளிய கதை நகர்வின் உள்ளே பற்பல உள்ளோட்டங்களும் சிக்கல்களும் இருக்கின்றன.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கன்னியாகுமரி நாவலை வாசித்தேன். மீள் வாசிப்பின் வழியாகவே ஒரு வாசகனாக மீண்டும் மீண்டும் உணர வைத்த அனைத்துப்படைப்புக்களில் முக்கியமான ஒன்றாக நான் நினைப்பது இந்த நாவலை.. ஆணின் ஈகோவை இவ்வளவு நுட்பமாக உணரவைத்த அனுபவத்திற்காக நன்றி.கண்டிப்பாக ரவியைப்போல ஈகோவைத் தக்கவைத்துக் கொள்ள நானும் ஓரளவுக்கு அப்படித்தான் அந்த அனுபவத்தை கடந்து செல்ல முடியும் என்று நினைக்கிறேன் “நீ என்னை ரொம்ப அற்பமா நினைச்சிருப்பே- என்ன இன்னமும் ஸ்டீபனை காணும் ” என்று இந்த பலவீனமான உள்ளுணர்வே ஒரு பொது ஆணின் அடையாளம் ஆகி இருக்கும் போல!

ரவி, விமலாவிடம் நீண்ட நாள் கழித்து தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் அந்த முதல் நிகழ்வே அவனின் அகங்கார சீண்டலுக்குத் தொடக்கம்.அது விமலாவின் தூய profile தன்மையால் மேலும் மேலும் இறுகிக் கொண்டே போகிறது ” படமே பார்க்கிறது இல்ல மத்தபடி வர்க வர்க வர்க தான், “ஆனா அவ அற்புதமா நினைச்சு என்ன தோற்கடிசிட்டா’’என்று பிரவினாவிடம் அவன் சொல்லும்போது,

“இவன் ஒரு சின்னப் பயன்னு தான் எனக்கு எண்ணம் , இப்ப இவனை நினைத்து கிட்டாலும்என்னை விட வயசு குறைவானவன்னு தான் என் மனசு பாவனை பண்ணும் , தனியே கூப்பிட்டு ஒரு அதட்டுப்போட்டா சரியாயிடுவான்’’என்று விமலா ரவியைப் பற்றி உதிர்க்கும் வரிகள், இறுதியில் அவன் உணரும் ஒட்டுமொத்தக் காட்சியும் தேவி முதற்கொண்டு காணாமல் போவது அவனை இனி மீளவே முடியாத ஒரு சுழலுக்குள் அவனின் அகங்காரமே தள்ளும்போது ரவியின் மேல் அனுதாமே வருகிறது .

பெண் என்பது உடம்பு மட்டும் அல்ல தன்னிலையும் அகங்காரமும் தான் ; அதை அகங்காரத்தால் மட்டுமே தொட முடியும் – நிதர்சன வரி கள் .

” சேர்ந்து வாழ்றதாவது ஐம் லிவிங் வித் சயின்ஸ்’’என்று தன் கடந்த கால அனுபவத்தை மறந்து சொல்லிக் கொண்டே போகும்போது லட்சியவாதியான ஆணை விட லட்சியவாதியான பெண் இன்னும் ஒரு படி மேல்.

அனுபவவாதியிடமிருந்து வரும் வார்த்தைகளே சிந்தனையின் பலம், வாழ்வியலை அவர்களின் சொற்களின் வழியே என்னால் உணர முயற்சிக்க முடியும் . விமலா அப்படி ஒரு ஆளுமை ;இதில் விமலா எவ்வளவு அசால்டாக சொல்லியபடியே போகிறாள்.

” இந்தக் கற்பு தூய்மை எல்லாம் சொல்ற அளவுக்கு மத்தவங்களுக்கு முக்கியம் இல்ல ”

“நடக்கும் பொழுது உள்ள பயங்கரம் நடந்து முடிந்த உடன் இல்ல ”

இருத்தலைப் பற்றிச் சொல்லும்போது , குற்றஉணர்வு இல்லாம நாம செய்ற எல்லாமே ஒழுக்கம் தான் இன்னும் நெறைய ,வாசிக்கையில் விமலாவின் அனைத்து அசைவுகளையும் பலவாறாகக் கற்பனை செய்து கொண்டேன்’ இந்த நாவலில் பிரவீனா அளவுக்கு சம நிலையான கதாபாத்திரம் எதுவும் இல்லை என்று நினைக்கிறேன் ..

“மத்தவங்களை உணர்ச்சி ரீதியா பொருள் ரீதியா ஏமாத்தாம இருந்தா எல்லாமே ஒழுக்கம் தான் ” இந்த ஒரு வரி மூலியமாக கன்னியாகுமரியை என்னால் ஐம்பது வயதிலும் எடுத்து விட முடியும். ரவிக்கு நேர்ந்த இம்மாதிரியான அனுபவங்கள் வாசகனின் வாழ்வில் ஏற்படுவது அரிதே ;ஆனால் படித்து முடிக்கையில் ஏழாம் உலகத்தில் பெரிய போத்தி, போத்தியின் மகள் கல்யாணத்தில் வந்து அவளிடம் சொல்வாளே, எது நடந்தாலும் எதா இருந்தாலும் ஒரு பத்து நாள் கழிச்சு முடிவெடு என்று,அந்தப் பத்து நாட்களை பொறுத்துக் கொண்டபடி அதன் பின்பு ஏற்படும் கால சமநிலையை இது ஓரளவு தரும்.அப்படி ஒரு தனனங்கார மட்டுப்படுத்தலுக்காக. ஆசிரியருக்கு என் நன்றிகள் ..

தினேஷ்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கன்யாகுமரிக்கு சமீபத்தில் சென்றிருந்தேன். நானே எழுதிய புனைவுக்கதாபாத்திரங்கள் காலம் உருவாக்கிய தூரம் வழியாக உண்மையானவர்களாக மனதுக்குள் பதிந்திருக்கும் விந்தையை உணர்ந்தேன்

ஜெ
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

எழுதியவர் : (9-Dec-18, 5:39 am)
பார்வை : 39

மேலே