அவரவர் மனம் வழி

இறப்பதே இன்பம் நிரந்தமில்லாத மனிதர்களிடையே வாழ்வதை விட.
இழுபறி மிகுந்த உலகில் உறுதிமொழி, தீர்மானம் எல்லாம் நிறைவேற்றப்படாத வெற்று பிதற்றல்கள் என்றே தோன்றுகிறது இங்கு வாழும் ஆறறிவுகளைப் பார்க்கையில்.

காதலன் உயிரோடு இருக்கையிலேயே மாறிவிடும் மனம் வெற்று பகட்டாக பல காரணங்களைக் கூறும்.
தேவை கொடிய எண்ணங்களின் அழிவு,
நாம் செய்வதென்ன?

தனிமனித ஒழுக்கத்தை அறவே மறந்து எழுபது வயது கிழவன் பதினாறு வயது பெண்ணை மணந்து சமூக சீர்திருத்தம் என்றால் கண்மூடிகளாய் அவன் பின்னாலேயே ஓடுகிறோம்.
கொள்கை கொள்கை என்று கேவலமானதை சீரணிக்க முடியாததை எளிதில் அடுத்தவரில் திணிக்க முயற்சிக்கிறோம்.

விளம்பரமில்லாத நற்கொள்கைகளை கொண்ட மனங்களும் உண்டு.
உண்மையில் ஒழுக்கமுள்ள நெஞ்சங்களை வாழ்த்துகள் விளம்பரமில்லாமல் சென்றடைகின்றன.

விரும்பாதவர்களிடம் என் கருத்துகளை நான் திணிப்பதில்லை.
பந்தங்களின் முக்கியத்துவம் போற்றப்பட வேண்டியது.
பெற்ற பிள்ளை இறந்தால் தாயே மறந்துவிடுகிறார் சில காலங்களில்.
அவரவர் மனம் எவ்வழியோ அவ்வழியே அமைகிறது அவரவர்களுடைய வாழ்க்கை.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (9-Dec-18, 5:26 pm)
பார்வை : 1174

மேலே