காப்பாற்ற முடியாத உறுதிமொழி எதற்கு

" நீ எங்கு போனாலும் அங்கெல்லாம் நானும் வருவேன் உன்னோட கைகோர்த்து. "
என்று காதலி சொல்ல,

" நான் எங்க போனாலும் கூட வருவியா? ஒரு வேளை சேத்துப் போனால் என்ன செய்வாய்? ", என்றே காதலனும் கேட்க,

" நானும் கூட வந்திருவேன். ", என்று காதலி கொடுத்த உறுதிமொழியும் காலப்போக்கில் மாறிவிடுகிறது.

அந்த காதலனும் வன்முறையாய் சாக,
உடனிருந்த காதலி தப்பிப்பிழைத்து மறுமணம் செய்து கொள்கிறாள் சில காலம் கழித்து.

காதல் என்பது வெறும் கற்பனையான உணர்வாகிவிட்டது.
காமம் மட்டுமே இவர்கள் மனதில் மேலோங்கி நிற்கிறது.
அருவருப்பானவர்கள் காதலை எப்போதோ கொன்றுவிட்டார்கள்.

இனி வெற்று உறுதிமொழிகள் எடுக்காதீர்கள்.
விளம்பரமாக
உறுதிமொழி எடுத்தோரெல்லாம் உத்தமமாக வாழ்வதில்லை,
சான்று கேட்டால் பதவிபிரமாண உறுதிமொழி எடுத்துக்கொண்ட அரசியல்வாதிகளே என்று கூறுவேன்.

கணவனுக்கு கொடுத்த வாக்கை மனைவியும்,
மனைவிக்கு கொடுத்த வாக்கை கணவனும் மீறுவதையே தங்கள் உரிமை என்று கதைக்கிறார்கள்.
சத்திய வழியில் வாழ்ந்தால் நிச்சயம் நல்ல சமுதாயம் அமையும்.
ஆனால் எளிதில் மாறிக் கொண்டே இருக்கும் பச்சோந்திகளால் இருக்கும் சமுதாயமும் அழியவே வழிவகுப்பதாய் தோன்றுகிறது.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (9-Dec-18, 3:32 pm)
பார்வை : 654

மேலே