என்னடா உலகம் இது

பாசம் ஒலிந்துக்கொண்டது
தன்னலம் தலைவிரித்தாடுது
தாயின் தியாகத்தை மறந்து
தாய்பாலுக்கும் விலைப்பேசும்
தங்கமகன்கள் வாழும் காலமிது...

அனாதை குழந்தைகள்
என்றிருந்தது
அனாதை பெற்றோர்கள்
என்றாகிப்போச்சு
அளவில்லா அன்பை பொழிந்தவள் இன்று அளவானஅன்புக்காக ஏங்குகிறாள்...

அம்மா நமக்காக
அசைந்து அசைந்து வியர்த்துப்போன ஒரு சாமரம்
அவள் சுவாசக்காற்றுக்கு ஏங்கவில்லை
பாசக்காற்றுக்கு ஏங்குகிறாள்
ஒருப்பிடி சோற்றுக்கு ஏங்கவில்லை
ஒருப்பிடி அன்புக்கு ஏங்குகிறாள்...

எங்கே போகிறது உலகம்
எட்டா கனியாகிப்போனது ஒற்றுமை
அண்ணன் தம்பிகள் பாசம் மாறி
பகையாளி பங்காளியானது...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (9-Dec-18, 9:40 am)
Tanglish : ennadaa ulakam ithu
பார்வை : 235

மேலே