மானிடம் செய்வோம் -

கண்ணை கண்
பிரித்து பார்த்தால்
பார்வையில் யாவும் இரண்டாகும்
காலும், காலை
பிரித்து பார்த்தால்
பாதை இருந்தும் பயனேது
மனிதனை மனிதன்
பிரித்து பார்த்தால்
மானிடம் எங்கு உண்டாகும்
பிரிவினை கொண்டு
தனித்து நின்றால்
தனிமரம் எங்கு வனமாகும்
சாதி, மதமென
பிரிந்து நின்றால்
சமூகம் இங்கு பிணமாகும்
சமத்துவம் கொண்டு
கனிந்து நின்றால்
சமதர்மம் உந்தன் குணமாகும்...
சாதிக்கும் மதத்திற்கும்
கல்லறை செய்வோம்
தாயின் மடியிலும்
பிரிவினையில்லா
கருவறை செய்வோம்
- -கல்லறை செல்வன்