மனமும் மகிழ்ந்தேன்

நாட்டமில்லை
மனதில்
நான்குவரி
கவிதையும்
நாளொன்று
எழுதிட
நானறியேன்
காரணமும் ...

நாட்டின்
நிகழ்வுகளா
நாளிதழ்களின்
செய்திகளா
நாளையுலகை
நினைத்தா ...

நானும்
யோசித்தேன்
நாளெல்லாம்
யாசித்தேன்
நானறிந்த
தமிழ்த்தாயிடம்...

நாசூக்காக
பதிலளித்தாள்
நாம்வணங்கும்
தமிழன்னை ...

நாளடைவில்
சரியாகும்
நாள்தோறும்
கட்டாயமில்லை
கவிதையும் ...

நாளுமெழுதும்
அறிவுரையாக
நாற்பதுவரி
வாழ்க்கைப்பாடம்
நாளொன்றில்
வாசிப்பவர்கள்
நால்வர் ஆனாலும்
நன்றே அதுபோதும்
நான் இருக்கிறேன்
உன்னோடு வாடாதே
என்றதும் தெளிந்தேன்
மனமும் மகிழ்ந்தேன் ...

நாளைய பதிவிற்கான
கருவினை சிந்திக்கத்
தொடங்கிய நொடியில்
உறக்கமும் தழுவியது
விழிகளும் மூடியது !

(காரணம் மணி
இரவு 11.50)

பழனி குமார்
10.12.2018

எழுதியவர் : பழனி குமார் (11-Dec-18, 7:46 am)
சேர்த்தது : பழனி குமார்
Tanglish : manathum magiznthen
பார்வை : 480

மேலே