கவி நிலா .....

மின்மினி போல்
ஒரு விண்மீன் வந்து
எங்கள் வீட்டில் கண்சிமிட்டுகிறது....
கண்மணிபோல்
இமை கதவுகள் கொண்டு
காக்கும் நாட்கள் துவங்குகிறது....
பொன்மணி அவள் கால்கள் தவழ,
தன்னிரு கைகளில்
எங்கள் மேனியை வருட...
கண்ணிரு பார்வையில்
எங்கள் இதயம் திருட...
பொன்னிற புன்னகை
வீடெல்லாம் நிறைய...
காத்திருக்கிறோம் நாள் ஒவ்வொன்றையும் கொண்டாட
எங்கள் மின்மினியோடு........
சுகன்.......