வேண்டும் ஓர் அடையாளம்
மனிதராய் பிறந்துவிட்டோம் நாம்..
மாறாக மரமாக பிறந்திருந்தால்..
நிழல் தந்திருக்கலாம்..
கனி தந்திருக்கலாம்..
பூ தந்திருக்கலாம்..
பறவைக்கு இடமும் தந்திருக்கலாம்..
மனிதனாய் பிறந்ததனால்
ஏனோ சுயநலம் தாக்கியதோ..?
மாதவம் செய்து மனிதனாய் பிறந்து
வாழ்ந்த சுவடின்றி
மடிந்து போவதற்கா இப்பிறவி..?
வாழ்நாளில் நம் அறிமுகம்
வாழ்ந்த பின்னும்
நிலைக்குமோ நம்மிடம்..?
இறப்பென்பது உறுதி..
இறுதி நாள் வருவதற்குள்
மனதில் கொள்வோம் உறுதி..
அழிவதற்குள் ஓர் அடையாளம்..
தனித்துவமாய் நமக்கென ஆக்கம் செய்வோம்..