நடந்திடு தோழா
வாளோடு வாளாய் இருந்த்து போதும்
தோளோடு தோளாய் இருந்திடு தோழா !
நாளோடு நாளாய் கழிந்த்து போதும்
ஆளோடு ஆளாய் இணைந்திடு தோழா !
கோளோடு கோளாய் சுழன்றது போதும்
பாலோடு பாலாய் பிணைந்திடு தோழா
தேளோடு தேளாய் தவித்து போதும்
காலோடு காலாய் நடந்திடு தோழா !