சிந்தனைக் கவிதை

⁉⁉⁉⁉⁉⁉⁉⁉⁉⁉⁉

*சிந்தனைக் கவிதை*


படைப்பு
*கவிஞர் கவிதை ரசிகன்*

⁉⁉⁉⁉⁉⁉⁉⁉⁉⁉⁉

அம்மா
கோபத்தை
இறக்கி வைக்கும் இடம்
'பிள்ளைகள்...'

✡✡✡✡✡✡✡✡✡✡✡

சூடிய மலரை
மாலை வந்தவுடன்
எடுத்தொறிவது போல்...
கல்யாணம் வந்தவுடன்
காதலனை
எடுத்தெறிந்து விடுகிறார்களே!
பெண்களுக்கு
எடுத்தெறிவது
'கை வந்த கலையோ....?'

✡✡✡✡✡✡✡✡✡✡✡

என் ஜாதிக்காரன்
வீட்டில் தான்
கல்யாணம் செய்வேன்...

என் மதக்காரன்
வீட்டில் தான்
கை நனைப்பேன்....

என் ஐாதிக்காரன்
வீட்டில்தான்
தண்ணீர் குடிப்பேன்...!
என்கின்றார்களே!

அவன் ஜாதிக்காரனோட
அவன் மதக்காரனோட
' மலம்' என்பதற்காக
லைத்துக் கொள்வார்களா
'உண்ணும் இலையில்...?'

✡✡✡✡✡✡✡✡✡✡✡

ஏழைச் சிறுவர்கள்
பட்டன் இல்லாத
சட்டையை
கையினால்
இருக்கி
பிடித்திருக்கிறார்களே.!
'நம் தேசத்தின்
மானம்'
போய்விட கூடாது
என்பதற்காகவோ....?

✡✡✡✡✡✡✡✡✡✡✡

எழுதியவர் : கவிஞர் கவிதை ரசிகன் (14-Dec-18, 7:34 pm)
பார்வை : 84

மேலே