வேரும், மரமும் நகைச்சுவை உரையாடல்
மரமும் வேரும் ஒன்றுடன் ஓன்று
பேசுவதில் நகைசுவை
வேர் ...மகனாக நீ எனக்கு
மரம் ....அதுதான் பெரிய தப்பாய் போச்சு
வேர்.... உன் இஷ்டத்துக்கு வளர்ந்து விட்டாய்
மரம் .... அதுக்கென்ன இப்போ /
வேர் .... மகனே/ நீ என் பிள்ளையடா
மரம்.... அது எல்லோரும் அறிந்ததே
வேர் ....அளவுக்கு மீறி நீ வளர்ந்து விட்டால்
மனிதன் உன்னை சும்மா விடமாட்டான்
மரம் ..... ஏய் இந்த பூச்சாண்டிக்கெல்லாம்
நான் பயப்படமாட்டன்
வேர் .... இளங்கன்று பயம் அறியாது என்று
அந்த நாளில் அறியாமலா சொன்னாங்க
மரம் .... ஏம்மா சும்மா அலட்டிக்காம உன் வேலையை பாரு
வேர் .....கெடுகுடி சொல் கேளாது என்பார்கள்
மரம் .... நீ வளர்த்து விட்டாய் நானும் விருட்சமாக வளர்ந்து நிற்கிறேன்
என்னை பார்த்து சந்தோஷப் படு அதைவிட்டு பயம் காட்டாதே
வேர் .....மகனே/ என் மனம் உனக்கு தெரியாது
பெற்றெடுத்த உள்ளம் என்றும் தாங்காது
மரம் .....என்னை என்ன செய்வாங்க ஏன் இவ்வளவு பயம் உனக்கு /
வேர் ..... நாம் தேக்கு மர குடும்பம் அதனால் நம்மை பயன்படுத்தி தங்கள் தேவைக்கு ஏற்ப
கதவு, யன்னல், கதிரை,மேசை இன்னும் என்ன என்ன பொருட்கள்
எல்லாம் செய்வார்கள்.
மரம் ..... நான் என்ன அவ்வளவு வல்லவனா/
வேர் ..... ஆம் மகனே/ நாம் நல்ல வல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் .
அதனால் தான் நான் பயப்படுகிறேன்.
மரம் .... சரி சரி வரட்டும் நானும் ஒருகை பார்க்கிறேன் நீ கவலைப் படாதே
வேர் .... வேர் தன் மனதிற்குள் வளரவும் விடமாட்டான்மனிதன் ,வாழவும் விடமாட்டான் மனிதன்.