காலம் மாறாதா?
பெட்டிப் பாம்பாய் வாய் பொத்தி,
தினம் கிடப்போம் என்று நினைத்தீரோ?
எம் உணர்வுகள் எல்லாம் ஊமையாய் மாற,
வழி சமைப்போம் என்று நினைத்தீரோ?
சாகும் முன்பு கொன்றவர் குடல்
கிழித்தெறிந்து மாய்ந்தவர் நாமெல்லோ
எம் வீரம் பார்த்து உலகம் வியந்து
தான் நின்றதை மறுப்பீரோ?
கூட படுத்து குலாவி கழித்தவர்
செய்த வஞ்சகம் எமை அழித்தால்
காலம் ஒருநாள் மாறும் என்ற
உண்மை நிலை நீர் மறந்தீரோ?