யடியன்தொட்ட Yatiyantota பைரவர் பரண்டி கோவில்
வரலாற்றுக் கதைகளுக்கு இலங்கை பிரபல்யமானது . ஊருக்கு ஊர் ஒரு கதை உண்டு .சிங்கள அரசர் காலத்தில் பௌத்தத்தில் இருந்து இந்துவுக்கு மதம் மாற்றம் இடம் பெற்றதாக வரலாற்றுக் கதைகள் உண்டு. இதுக்கு மிக காரணம் தமிழ் நாட்டில் இருந்து வந்த பெருமாள் குல வழி வந்த பூசாரிகளே.
இவர்கள் மன்னர்களின் ஆலோசகர்களாகவும். மெய்காப்பாளர்களாகவும், விசுவாசிகளாகவும் இருந்தனர் . அதோடு சிலர் மன்னர் குடும்பத்தில் திருமணம் செய்தனர். பெருமாள் பூசாரி பரம்பரை தென் இந்தியாவில் இருந்து வந்த தமிழர்கள் . இலங்கையின் பிரதமராக இருந்த பண்டாரநாக்கா குடும்பம். இவர்கள் அடி வந்தவர்களே .
17 ஆம் நூற்றாண்டில் தமிழகத்திலிருந்து குடியேறிய “நீலபெருமாள்” என்ற தமிழன் தன்னை “நீலபெருமாள்கே” என்று சிங்கள பெயர் பெற்றார். நீலபெருமாளின் மகன் வழி வாரிசான “டயஸ் விஜயதுங்க பண்டாரநாயக்கா ” மகன் “டானியல் பண்டாரநாயக்கா”, இவர் ஞானஸ்தானம் பெற்றது 1748 இல்
“டானியல் பண்டாரநாயக்கா” வின் மகன் “தொன் சொலொமன் பண்டாரநாயக்கா”. இவர் பிரிட்டிசாருக்கு உளவாளியாக செயல் பட்டவர். இவரது மகன் தொன் கிறிஸ்டோபர் பண்டாரநாயக்கா. இவரது மகன் தொன் சொலொமன் டயஸ் பண்டாரநாயக்கா. இவரது புத்திரர் தான் எஸ்.டபுள் யூ .ஆர்.டி. இவரது மகன் பண்டாரநாயக்கா. பண்டாரநாயக்கவின் புதல்வியே சந்திரிக்கா.
****
சப்ரகமுவா மாகாணம் இலங்கையில் உள்ள ஒன்பது மாகாணங்களில் ஒன்று. இந்த மாகாணத்தில் பிரசித்தமான நகரங்கள் இரத்தினபுரி,கேகாலை, பலாங்கொட , யடியன் தொட்ட , எம்பிலிப்பிட்டிய ஆகியவை
சீத்தாவக்க பகுதியை 1521-1581 வரை ஆண்ட விஜய 7 ஆம் விஜயபாஹுவின் மகன் மாயதுன்னவை அறியாதவர்கள் இல்லை இக்காலக் கட்டத்தில் இலங்கைக்கு 1505 யில் வியாபாரம் செய்ய கொழும்பில் வந்திறங்கிய போர்த்துக்கேயர், திட்டமிட்டுக் கள்ளத்தனமாக கோட்டே என்ற இராச்சியத்தைக் கைப்பற்ற முயன்றனர் , காரணம் அந்தப் பகுதியில் கறுவா, ஏலக்காய் , கராம்பு போன்ற வாசனைப் பொருட்கள் விளைந்ததே. போர்த்துக்கேயரை எதிர்த்து நின்றவர் மாயதுன்ன. 1559யில் மாயதுன்ன போர்த்துக்கேயரோடு களனி நதிக்கு இடப் பக்கத்தில், அங்கோடவுக்கு அருகே உள்ள முல்லேரியா என்ற இடத்தில் கடும் போர் புரிந்தான் இந்த போரில் மாயதுன்னவின் மகன் டிகிரி பண்டார என்ற முதலாம் ராஜசிங்கா முக்கிய பங்கு வகித்தான்.
ராஜாசிங்க என்ற பெயரின் அர்த்தம் வீரத்தையும் தோற்றத்ததையும் செலையும் எடுதுக்காட்டுகிறது
****
இலங்கையின் . சபரகமுவ மாகணத்தின் சீதாவக்க பகுதியை ஆண்ட மன்னர் இவர், இந்துமத் தழுவி பைரவருக்கு கோவில் மைத்வர். பத்தினி வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர். போர்த்துகேய்ர்களை எதிர்த்து நின்றவர் பெதன்கோடா . ருவன்வெல, மனியன்கம அகிய கிராமவாசிகள் இன்றும் மன்னர் மேல்தனி மரியதை வைத்திருக்கிறார்கள் அவனின் வீரத்தை போர்துக்கேயர் மதித்தனர், பல தடவை கோட்டே பகுதியை தாக்கி இறுதியில் பெற்றி பெற்றனர். ஆனால் பகுதியை தம் கட்டடுப்பாட்டுக்குள் வைத்திருக்க அவர்களால் முடியவில்லை. கொழும்பு பகுதிக்கு நகர்ந்தனர்
****
அவிசாவளையிலிருந்து சுமார் 3 கிலோமீற்றர் தூரத்தில் இருக்கிறது தல்துவை எனும் சிற்றூர். அங்கு அழகானதொரு சூழலில் அமைந்திருக்கிறது பெரண்டி(பைரவர் ) கோயில்.
இது சீதாவாக்கை ஆறு ஊடறுத்துச் செல்ல சிறியதொரு குன்றின் நடுவே பச்சைப் புல்வெளியில் பாழடைந்து காணப்படுகிறது.
கருவறை, அர்த்த மண்டபம் ஆகியனவும் சிதைவடைந்த கற்களும், கல்வெட்டுக்களும் கோயிலின் பழைமைக்குச் சான்றாக விளங்குகின்றன.
இது முதலாம் இராஜசிங்கன் (1581-1592) கட்டிய கோயில் எனக் கூறப்படுகிறது. கண்டி இராச்சியத்தை ஆண்ட இராஜசிங்க மன்னன் இந்து தெய்வங்களில் நம்பிக்கை கொண்டிருந்தான். குறிப்பாக சிவ வழிபாட்டில் தன்னைக் கூடுதலாக ஈடுபடுத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கு அவனது இந்து மத ஆலோசகர்களே காரணம்
தனது இராச்சியத்தை தக்க வைத்துக்கொள்ளவும் பாதுகாப்புக்காகவும் கிராமிய தெய்வ வழிபாட்டு முறைகளையும் செய்துள்ளான். இந்நிலையிலேயே சீதாவாக்கை ஆற்றை அண்மித்ததாக பைரவர் கோயிலை அமைக்கத் திட்டமிட்டான்.
மக்களின் ஆதரவை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும் தனது செல்வாக்கை உயர்த்திக்கொள்ளவும் மட்டுமல்லாது காவல் தெய்வத்தின் அவசியமும் இந்தக் கோயில் கட்டப்படுவதற்கு முக்கிய காரணமாகும்.
அதற்காக இந்தியாவிலிருந்து கட்டிட நிபுணர் ஒருவரை இராஜசிங்கன் வரவழைத்தான். அவரது பெயர் அரிட்டுகே வெண்டு என்கிறார்கள் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தின் அதிகாரிகள்.
அரிட்டுகே வெண்டு சிற்பத்துறையில் மட்டுமல்லாது சாஸ்திரங்களிலும் சிறந்து விளங்கியவன் . சீதாவாக்கை ஆற்றை இடைமறித்து அதனை வேறு திசைக்குத் திருப்பி பைரவர் கோயில் கட்டப்பட வேண்டும் என அவரிடம் மன்னன் கோரிக்கை விடுத்துள்ளான்.
ஆற்றைத் திசைதிருப்புதல் பாவச்செயல் என்பதுடன் அதனால் பாரிய பின்விளைவுகளை எதிர்நோக்க வேண்டிவரும் என்றும் சாஸ்திரத்தின் பிரகாரம் அவ்வாறு உள்ளதாக அரிட்டுகே வெண்டு எச்சரிக்கை விடுத்துள்ளான்.
இதனால் தான் அல்லது அரசன், அல்லது ஆறு இந்த மூன்றில் ஒன்று இல்லாமல்போகும் எனத் தெரிவிதான் . (இதனை சிங்கள மொழியில் "மாவோ, ரஜாவோ கங்காவோ' என்று சொல்வார்கள். இந்தக் கூற்று இப்போதும் வழமையில் உள்ளது.
அரிட்டுகே வெண்டுவின் எச்சரிக்கையை ஏற்றுக்கொள்ளாத இராஜசிங்கன் கோயிலைக் கட்டுமாறு பணித்துள்ளான். அதன்பிரகாரம் கடுமையான உழைப்பின் பின்னர் ஆற்றை மறித்து பைரவர் கோயில் உருவாகியுள்ளது.
சுமார் 2 ஆயிரம்பேர் 20 ஆண்டுகள் கடுமையாக உழைத்து இந்தக் கோயிலைக் கட்டியதாக "அசிரிமத் சீதாவக' எனும் சிங்கள நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரிட்டுகே வெண்டுவின் எச்சரிக்கையின்படி கோயில் அமைக்கப்பட்ட பின்னர் இராஜசிங்க மன்னன் உயிரிழந்தான்.
இலங்கைக்குப் படையெடுத்த போர்த்துக்கேயர் இந்து ஆலயங்களை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். அதில் இந்த பைரவர் கோயிலும் உடைக்கப்பட்டது.
கோயில் சிலைகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் அழிக்கப்பட்டன. அப்போது தொடக்கம் சிதைவுற்ற நிலையிலேயே இந்தக் கோயில் காணப்படுகிறது. இராஜசிங்கனின் தந்தை மாயாதுன்னையின் கட்டளையின்பேரில் இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டதாகவும் இன்னுமொரு தகவல் கூறுகிறது. எவ்வாறாயினும் இந்த ஆலயம் சுமார் 500 வருட கால பழைமை உடையது.
கோயிலின் பிரதான வாயில் உட்பட நான்கு வாயில்கள் காணப்படுகின்றன. உள்வீதியுடன் வெளிப்பிரகாரம் கற்களால் கட்டப்பட்டிருக்கின்றன. கருவறைத் தளம் உட்பட அனைத்துப் பகுதிகளுமே மிகச் சிறந்த சிற்பவேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளன.
பைரவர் கோயில் பெரண்டி கோயிலானது எப்படி?
தல்துவையில் கோயிலுக்கு அருகில் வசிக்கும் மக்கள் பெரண்டி கோயில் என்றே அழைக்கிறார்கள். ஆனால் அந்தப் பெயர் எப்படி வந்தது? அதற்கான அர்த்தம் என்ன? போன்ற கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இல்லை.
"பைரவர் காவல் தெய்வமாதலால் ஆரம்பகாலங்களில் வாழ்ந்த மக்களிடையே ஓர் அச்சம் காணப்பட்டது. இரவில் நடமாடுவதற்குக் கூடப் பயப்பட்டனர். அந்த மக்கள் அதிகமான நேரங்களில் "பைரவயா எனவோ' (பைரவர் வாறார்) என சிங்களத்தில் பேசிக் கொள்வதுண்டு' என்கிறார் பிரதேசவாசி ஒருவர்.
இந்தப் பெயர் மருவி பெரண்டி கோயில் எனத் தற்போது அழைக்கப்படலாம் எனவும் சிந்திக்கத் தோன்றுகிறது.
****
அங்குருவேல சந்தியில் இருந்து மூங்கில் மரப் பதர்கள் உள்ள பெதான்கோட (Pethangoda) இடத்துக்குப் பேரூந்தில் போகமுடியாது. வளைந்த பாதயில் மூன்று மைல்கல் நடக்க வேண்டும் அந்த கிராமத்தில் ரப்பர், கோபி தோட்டங்கள் பலவுண்டு. இந்த அழகிய கிராமத்தில் ராஜசிங்க மன்னரின் வாசஸ்தளம் இருந்தது .தனது பெதான்கோட வீட்டு பூங்காவில் உலாவி வரும் போது காலில் மூங்கில் மரம் ஒன்றின் கூரிய முள் தைத்ததினால் மரணத்தை மன்னர் தழுவினார் என்கிறது வரலாறு. அதே நேரம் மூங்கில் பதரில் இருந்த நாகம் தீண்டியதால் இறந்தார் என்ற கருத்தும் உண்டு. மூங்கில் மரங்கள் தோல் பொருள் திணை களத்தினால் பாதுகாக்க படுகின்றன. அதன் அருகே மன்னரை அடக்கம் செய்த இடமும் உண்டு
****
ராஜசிங்க மன்னன் இலங்கையில் பத்தினி வழிபாட்டுக்கு முழு அதரவு அளித்தவன் .கண்ணகி அம்மன் வழிபாடு கி.பி 171 முதல் கி. பி. 193வரை அனுராதபுரத்தில் இருந்து ஆட்சி புரிந்த கஜபாகு என்ற அரசனால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதென இராஜவாளி என்ற சிங்கள நூல் கூறுகிறது. கஜபாகு ஆட்சி காலத்தில் சேரமன்னன் செங்குட்டுவன் தனது தலைநகராகிய வஞ்சியில் இமயமலையில் இருந்து கொண்டு வந்த கல்லில் கண்ணகிக்குச் சிலை செய்து, கோயில் அமைத்து பெரு விழா எடுத்தான் கி;. பி. 178ல் நடந்த அவ்விழாவிற்கு செங்குட்டுவனின் அழைப்பையேற்று அவன் நண்பணாகிய கஜ அவ் விழாவில் கலந்து கொண்டான். இவ்விழாவில் பாண்டிய மன்னன் வெற்றிவேற் செழியனும், சோழ அரசன் பெருநற்கிள்ளியும், கொங்குதெச அரசன் இளங்கோ அடிகளும், மகததேச மன்னரும் கலந்துகொண்டாதாக துரைஜெயநாதன் ~ஆதிதிராவிடரும் அழிந்துபொன சங்கங்களும்| என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். விழாவில் கலந்த கஜபாகு, கண்ணகியின் அற்பதங்களைக் கண்டு வியந்தான். கஜபாகு கண்ணகியை செங்குட்டுவனைப் போல் நித்தியபூசை செய்து வலம் வந்து தன் நாடடிலும் எழுந்தருளி அருள்புரிய வேண்டும் என்று அவன் கேட்டு பிரார்த்தித்தான். அவன் விரும்பியபடி எல்லாம் நடக்குமென அசிரீரி கேட்டு, கஜபாகு உள்ளம் நெகிழ்ந்து கண்ணகிமேல் கூடிய நம்பிக்கை கொண்டான். இலங்கையில் கண்ணகி வழிபாட்டினை பரப்புவதற்கு தன் விருப்பததை செங்குட்டுவனிடம் கஜபாகு தெரிவித்தான்.
செங்குட்டுவன் சந்தன மரத்தால் செய்த கண்ணகி சிலையையும் ஒரு காற்சிலம்பையும் சந்தனமரப்பேழையில் வைத்து கஜபாகுவிடம் கையளித்தான. கஜபாகு கண்ணகி விக்கிரகத்துடன் இலங்கைக்குத் திரும்பும்போது தன்னுடன் பன்னிரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பல்குடிமக்களையும் அழைத்துச்சென்றான். அவன் வந்திறங்கிய சிலையுடன் வந்திறங்கியது மாதகலுக்கருகேயுள்ள சம்புகோளத் துறைமுகம். யானை மேல் சிலையைவைத்து பல யானைகள் பின்னே வர ஊர்வலமாய் போக பல இடங்களுக்கு எடுத்துச்சென்றான். ஊர்வலம் நின்றயிடமெல்லாம் கண்ணகி வழிபாடு தோன்றிற்று. சம்புகோளத் துறைமுகத்தில வெள்ளரசுக கிளையோடு அசோக சக்ரவர்த்தியின் மகள் சங்கமித்த வந்திறங்கியதாக வரலாறு கூறுகிறது.
இப்படி உருவாக்கப்பட பத்தினி கோவில்களில் கொழும்பு அவிசாவளை பதில் உள்ள கடுவளவுக்கு அருகே உள்ள நவகமுவ பத்தினி கோவில் வரலாறு பெற்றது. நவ என்ற வேம்பு மரத்தின் கீழ் அ பத்தினி தெய்வம் அது அருகில் உள்ள முல்லேரியாவில் போர்துக்கேயருக்கு எதிராக மாயதுன்ன மன்னர் நடத்திய போருக்கு போக முன் நவகமுவா பத்தினி தெய்வத்தை வணங்கி சென்றான். வருடாவருடம் இகொவிளில் பெரஹெரா இடம் பெரும். இக்கோவில் பிரசித்தம் பெற ராஜசிங்க மன்னரின் பெரும் பங்கு உண்டு .1576 இல் இக் கோவில் போர்த்துகேயரால் சிதைக்கப் பட்டு பின்னர் மாயதுன்ன மன்னரால் சீரமைக்கப் பட்டது
****
யடியன்தொடவுக்கு அண்மையில் உள்ள கிராமம பெதன்கோடா. இந்த கிராமத்தின் சிறப்பு மூங்கில் மரங்கள் ஓங்கி வளர்ந்த கிராம்ம . அதுவும் கரும் பச்சை நிறமுள்ள மரங்கள். இதன் முற்றக் கூர்மையானவை. இந்த முள் ஒன்றே ராஜசிங்கவின் கால்களில் தைத்து சரிவர வைத்தியம் செய்யாததால் ரண ஜன்னி, எனும் ஏற்புவலி ஏற்பட்டு மன்னரின் உயிரை போனதாக கதை உண்டு . மன்னர் தன் தந்தைக்கு செய்த குற்றத்தினால் மன்னருக்கு அந்த மரணம் ஏற்பட்டதென ஊர்வாசிகள் பேசிக்கொண்டனர். அவரை அடக்கம் செய்த இடத்தைச் சுற்றி முள் வேலி போடப்பட்டுள்ளது. இது புதைபொருள் ஆய்வு திணைக்ளத்தால் பாதுகாத்து வரப்படுகிறது
வாழை மரம் பூத்து காய்த்ததும் இறந்து விடும் அதே போல் மூங்கில் மரம் பூத்ததும் தனது ஆயுள் முடிவடைய போகிறது என்பதை எடுத்துச் சொல்கிறது. .
ராஜசிங்க மன்னரரின் மரணத்தை பற்றி பல கதைகள் கிராமத்து வாசிகளால் சொல்லப்பட்டது” ராஜாவின் பேரனான ராஜசூரியவை திருமணம் செய்து கொள்வதற்காக மணமகன் டோதம்பே கணித்தாயாவின் மகள் ஒரு இளம் அழகியா. அவள் மேல் மன்னரின் பார்வை விழுந்தது அது . தனக்கு ஏற்றபட்ட அவமதிப்பு என்று கருதி, அவரை அந்த அழகி “நீ பாம்பு தீண்டி சாவாய்: என சபித்தாள். அதன்படி முங்கில் புற்றுக்குள் இருந் பாம்பு தீண்டி அவருக்கு மரணம் ஏற்பட்டது என்ற கதையும் உண்டு .
****