கவிக்கோர் கவிதை

அகஅழகை அழகாய் ரசித்திடும் கவிக்கோர் கவி எழுத ஆசை....
பல மனங்களின் கள்வன் கவிதைகளின் காதலன்....
புன்னகையை கொள்ளையடித்து, இன்பத்தையும், துன்பத்தையும் ஒரு சேர அலங்கரித்து உருவகம் கலைந்து உள்ளத்து உணர்வை வார்த்தைகளில் வார்த்து
வரிகளில் விந்தை காட்டும்
வித்தகன்....
உனது வார்த்தை ஜாலம் காட்டும் விந்தை தான் என்னவோ?....
உன் கவிதையில்.....
பலமுறை படித்தும் புதியதோர் இன்பம் தருவாயே...
ஆம்.....அதன் சூட்சுமத்தை எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய்....
ஆம்....அவன் கவிதை...
தனிமை என்னை அரவணைக்கும் பொழுதும்....அவன் கவிதையின் கற்பும் கூட காக்கப்படுகிறது...மீண்டும் மீண்டும் இவரியை உனககே உரித்தாக்குகிறேன்..
நீ என் மௌனத்தின் மொழியறிந்த முதல் அந்நியன்...