கட்டிக்கிறேன் மாமோய்
அந்தி மயங்கும் வேளையிலும்
மந்தை ஆடு மேய்க்கும் சுந்தரியே...
உன் சிந்தை எங்கே போய்விட்டது
சித்த நேரம் உங்கூட பேச நான்
ஒத்தக்காலில் நிக்கும் போது
மெத்தனம் காட்டியவ தானே நீ...
இப்போ உன் மொத்த ஆடும் புகுந்து
யுத்தபூமி ஆக்கி விட்டதே பயிரை..
குற்றுயிராக்கி விட்டதே எனதுயிரை
இப்போ எனக்கு ஒன்னு தெரிஞ்சாகணும்..
ஒன்னு ஒத்தவிரலில் எல்லா
நஷ்ட ஈடும் கொடுத்திடு..இல்லை எனை
கட்டிக்கிறேன் மாமான்னு சொல்லிடு..
😘😘