எதை நோக்கி பயணிக்கிறோம்

ஏலோ பாடும் கிராமத் தென்றலில் தாலேலோ பாடி விவசாயம் செய்த காலம் மலையேற,
கணினியில் கானல்நீராய் நம் வாழ்க்கையும் கரைய,
பெட்ரோல், டீசலில் பேரம் பேசி உலகமே சோரம் போனது காய்கறிகள் போக்குவரத்திற்காக.

அந்தந்த கிராமத்தில் விளைந்ததை அங்கங்கே தின்றுவாழ்ந்த காலம் நோய்களெல்லாம் தலைதூக்கியதில்லை.
வேதியியல், உயிரியல் என்று நுணுக்கங்களை கொண்டு மாற்றி அமைக்கப்பட்ட காய்கறிகளை உணவுப் பொருட்களை உண்டு,
பல நோய்களை உண்டாக்க நோய் எதிர்ப்புத் திறனையும் குறைக்க எல்லாரும் மருத்துவமனைக்கு படையெடுக்க ஒருவரின் துன்பம், இன்னொருவரின் பையில் நிறையும் பணம் என்று சூழ்நிலை தாக்கங்களை ஏற்படுத்திக்கொண்டு எதை நோக்கி பயணிக்கிறோம்? என்பது தெரிகிறது தெளிவாக.

அரிவாள் தெங்காய் வெட்ட,
கத்தி பழங்களை நறுக்க சமயத்தில் கோபத்தில் கொலை செய்யப் பயன்பட்டன.
இன்றெல்லாம் துப்பாக்கிகள்,
தெறிக்கும் தோட்டாக்கள்,
பயனென்ன?
அழிவு ஒன்றே அவற்றின் நோக்கமாக நீங்கள் கூறும் தற்காப்பு எப்போதுமே கேள்விக்குறியாகவே இருக்கிறது பதிலற்று.

சிறு எறும்பும் தனக்கான தற்காப்பிற்காகவே கடிக்கிறது எனினும் நம்மை கடித்ததுமே நசுக்கி சாகடித்து விடுகிறோம் மனிதமற்றவர்களாய்.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (26-Dec-18, 3:13 pm)
பார்வை : 4526

மேலே