அண்ணி
அண்ணி
தாய்க்கு தாயுமானவள்
தோழிக்கு தோழியுமானவள்
எங்களின் குறைதீர்க்கும்
தெய்வமானவள்...
எத்தனையோ
வருடங்களுக்குப்பிறகு
மீண்டும் எங்கள் வீட்டில் தினமொரு
அழகான புத்தம்புது காலை...
வண்ண வண்ண
கோலங்கள் வாசலிலே
வசந்தம் வீசும்
எங்களின் மனதிலே
கலைகட்டியது எங்களின்
வீடு இவள் வரவினிலே...
அழிந்துப்போன எங்களின்
நாவின் சுவை மொட்டுக்கள்
துளிர்விட்டது இவள்
இன்முகங் காட்டி
அமுது படைக்கையிலே
காண்கிறோம் ஈன்றெடுத்த தாயை
இவள் உருவிலே...
வைபவங்களும்
விழாக்களும் சாதரண நாட்களவேயிருந்தது இவள் வரும்முன்...!
சாதாரண நாட்களும்
வைபவங்களும் விழாக்களுமானது
இவள் வந்தப்பின்...
மகாலட்சுமி என்பார்கள் கேட்டதுண்டு பார்த்தில்லை
இப்போ பார்த்துவிட்டோம்
மாகாலட்சுமியை எங்களின்
அண்ணி வடிவிலே...
சொர்கம் என்பார்கள்
அறிந்ததில்லை இப்போ உணர்கிறோம் எங்களின்
வீடே ஒரு சொர்கமென்று இவள்
எங்களோடு வாழ்கையிலே...
எங்களின் அண்ணிப்போல்
எல்லோருக்கும் வாய்த்துவிட்டால்
எங்கள் வீடுமட்டுமல்ல
இந்த உலகமே சொர்கம்தான்....
.
கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்...
.