எனக்கு ஒரு தாலாட்டு

என் கனவுகளை காற்றில் பறக்கவிட்டேன் ...
என் நினைவுகளை பாரமாக என்
நெஞ்சில் சுமந்து விட்டேன்..
வலி என்ற விதியால் சிக்கிவிட்டேன் ..
இனி இழப்பதற்கு எதுவும் இல்லை
இழந்ததே போதும் என்று நினைத்துவிட்டேன் ..
இழப்பதற்கு என் உயிர் மட்டுமே மிஞ்சி
உள்ளது அதுவும் எனக்கு சொந்தம் இல்லை ..
கேட்பதற்கு யாரும் இல்லை ...
கேட்பாரற்று கிடக்கிறது என் மனசு ...
தனிமையின் கொடுமையை அனுதினமும் ரசித்து விட்டேன் ..
இனி ரசிக்க ஏதுமில்லை என்ற எண்ணத்துக்கு வந்துவிட்டேன் ...
சுட்டெரிக்கும் 'தீ' போல என் கனவுகளை பொசுக்கிவிட்டேன் ...
சுயநலமில்லா உறவைத்தேடி பயணம் மேற்கொண்டு விட்டேன் ...
ஆனால் நான் தோற்று விட்டேன்
சுயநலமில்லா மாயஉறவு எங்கும்
இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன் ..
காற்றே நீயாவது என்னை கரைய விடு ..
நான் பறந்து செல்ல உதவிடு ..
என் அழுகுரல் யாருக்கும் கேட்கக்கூடாது ...
என் வேதனையின் உச்சமே என் அழுகை
அதை நான் இழக்க விரும்பவில்லை ..
என்றும் என்னுடன் இருக்கவிட்டேன் ..
நான் வேள்வித்தீயில் வெம்பி சாகும் வெண்பறவை..
பறக்க தெரிந்தும் பறக்க மனம் இல்லை
வாழத்தெரிந்தும் வாழ மனம் இல்லை ..
ஆனால் வாழ்ந்து தான் ஆகவேண்டிய கட்டாயம் ...
பேச தெரிந்தும் பேசா மௌனநிலையாகி போனேனே ..
என் வாழ்க்கை சிதைந்து விட்ட மரத்துகள்கள்
அதை ஒன்றிணைத்து மீண்டும் மரம் மாக்க முடியாது
அதுபோல தான் என் வாழ்க்கையும்
பஸ்பமாக மண்ணில் விழுந்துவிட்டது ...
என்னுள் எழும் கேள்விக்கணைகள் அனைத்தும்
சுட்டவாணலியில் தெறிக்கும் எள்போன்று மாறி நிற்கின்றது ..அனுதினமும் நான் இவையையே தாலாட்டாக பாடுகின்றேன் ....

எழுதியவர் : பிரியா (26-Dec-18, 3:10 pm)
பார்வை : 350

மேலே