சொல்லாமலே இருந்திருப்பேன்

சொல்லாமலே இருந்திருப்பேன்

சொல்லும் முன்பு காதல் சுகமானது
சொல்லிய பின்பு காதல் ரனமாகுது ...

சொல்லாத காதல் பனித்துளி
சொல்லிய காதல் நெருப்பு பொறி...

சொல்லாத காதல் கோபுரம்
தனில் ஏறும்...
சொல்லிய காதல் குப்பை
தனை சேரும்...

சொல்லாத காதல் வண்ணக்
கனவுவுகளில் மிதக்கும் சுகமாக...
சொல்லிய காதல் வங்கக்கடல்
தனில் மிதக்கும் பிணமாக...

சொல்லாத காதல் மலர்களை
என்னை நோக்கி வீசியது...
சொல்லிய காதல் மரணத்தை
நோக்கி என்னை வீசியது...

சொல்லாத காதலால் விண்ணில்
பறந்தேன்....
சொல்லிய காதலால் மண்ணில்
புதைந்தேன்...

சொல்லாமலே இருந்திருப்பேன்
அவளிடம் சொல்லிய என் காதலை....
இதயம் முரளி.மா

எழுதியவர் : மா.முரளி (28-Dec-18, 7:40 am)
சேர்த்தது : இதயம் முரளி மா
பார்வை : 578

மேலே