காற்றைத் தடுக்காத கதவுகள்

கதவு திறந்திருப்பதால்
காற்றைத்
தடுக்க முடியவில்லை-
அது
உள்ளே வருவதை..

கதவுகள் பல இருந்தும்
உள்ளே உலவும்
காற்றைத்
தடுக்க முடியவில்லை-
அது
உடலை விட்டு
வெளியே வருவதை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (28-Dec-18, 7:19 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 98

மேலே