அணிக்கு அணி செய்யும் அழகு தமிழ் அவள்
மொழிக்கு தமிழ் அழகு... மௌனத்திற்கு பெண்ணே நீ அழகு....
தமிழுக்கு அனம் இலக்கணம்...
அழகுக்கு சிறப்பு அவள் குணம்....
முத்தமிழ் முத்து பல் அழகி....
பைந்த்தமிழாய் என்னை பரிதவிக்க வைக்கும் பண் அழகி.....பெண் அழகி...
பெண்ணே....
உன் நடை... தமிழின் நன் நடை....
உன் இடை.... தமிழின் உரைநடை....
தமிழுக்கு அணி சேர்க்கும் அழகு அவள்..
அழகை மிஞ்சும் அதிசய அணி இவள்....
உன் குரல் எனக்கு திருக்குறள்...
இரண்டு அடி நடந்து என்னை அளந்து விடுகிறாய்...
கூந்தலில் இவ்வளவு அழகாய் சூடி இருக்கிறாயே...இது என்ன ஆத்திசூடியா?
நீ எனக்கு உயிர் எழுத்து...
பொட்டு வைத்திருக்கும் மெய் எழுத்து..
வானம் உயர்ந்த வண்ண வானவில் தமிழாம்....
வெற்றி வாகை சூடும் வெள்ளி மலராம்...
ஆழி தமிழால்.... ஈழத் தமிழால்...
உன் அழகுத் தமிழால்.... உலகில் என்றும் அழியா தமிழாம்.....