தனிமை
தனிமை ஒன்றும்
அத்தனை சுகமானதாய் தெரியவில்லை
ஆனாலும் அதை வேண்டாம் என்று
விட்டு விடவும்
முடியவில்லை ...
விருப்பம் இல்லாத
நூறுபேரின் அருகில்
வாழ்வதை விட
நாம் விரும்பும்
நம்மை விரும்பும்
தனிமை போதுமானதாக இருக்கிறது
பல தருணங்களில்...........