கேலி

அழுக்கு மனங்கள்
தொட்டுக் கூசின;
அச்ச மனங்கள்
தொடக் கூசின.

வாழ்வின் செம்பாதி
இருட்டுப் பட்டது.

நாம் தோன்றியதும்
நம்மில் தோன்றியதும்
புறங்கை வீச்சில்
போய்விடுமா?

நம்மில் அந்த
மலைச்சிகர
பனிப்புகைத் திரை
இடைவெளி ஏன்?
கண்களை மூடிக்கொண்டிருந்தால்
நம் வாழ்வு மட்டுமல்ல
நாமே
காணாமல் போய்விடுவோம்.

வாழ்வின் பொற்கிரண
ஒளிவெள்ளப் பாய்ச்சலில்
சொர்க்கச் சுவடு.
விட்டுவிடின்
மரண வாசலில்
நம்மைப் பிறர் அல்ல
நாமே கேலிசெய்ய நேரிடும்.

எழுதியவர் : கனவுதாசன் (30-Dec-18, 2:43 pm)
சேர்த்தது : கனவுதாசன்
Tanglish : kelay
பார்வை : 34

மேலே