வாழ்க்கை நிலை

விழித்து எழுந்திரும் நொடிகள் மட்டும்
சுற்றும் பூமி சற்று நிற்காதோ
எழுந்த உடனே ஒடும் நாட்கள்
எந்தன் விதியில் அழியாதோ.

எழுதப்பட்ட சுவடு போல
என் வாழ்வில் எதுவுமே மாறாதோ
நீ நினைத்தால் போல் ஒரு நாள் மாறும்
இந்த வரிகள் கூட மாறாதோ.

வாழ்வின் எல்லை இதுதான் தெரிந்தால்
சிரித்துக்கொண்டே ஓடிடுவேன்
வாழ்வை தேடி செல்லும்போது
முடிவு எப்படி அறிந்திடுவேன்.

இந்த தனிமை ஓயும் நேரம்
உனக்கான ஒரு உலகம் பிறக்கும்
இமை திறந்து பார்த்ததும்
அதிலும் இப்டியா என் வாழ்விருக்கும்.

எழுதியவர் : Mohanaselvam (30-Dec-18, 2:57 pm)
சேர்த்தது : Mohanaselvam j
Tanglish : vaazhkkai nilai
பார்வை : 182

மேலே