2019 வருக
விடுமுறை நாள் தொடங்கி
இறுதி நாள் வரை - பல
வலிகளை பலமுறை தந்தாய்,
பாவி ஜனம் போஜனமும்
புரோயோஜனம் இன்றி தவிக்க
கஜாமுகனாய் காற்றாய்
சூறையாடி சென்றாய்!
அவமானங்களின் அடையாளம்
மெத்தன ஆளுமையும்
வேடிக்கை காட்டும் - பகடி
கூட்டமாய் ஆளத்துடிப்போரையும்
அடையாளம் தந்தாய்,
ஆளில்லா கூடாரமாய் வேறோடு
விழுங்கவும் செய்தாய்,
விடையில்லா வினவாகவே நீயும்
2018 ஆம் எண்ணிக்கை வருடமாகவே
மறைகிறாய்!
எந்நிலங்க அபகரிக்க
எண்ணிலடங்கா கைக்கூலி
ஒன்றுசேர,
எடுத்தது ஆதாயம், கொடுத்தது
தடுப்பது தாராளம்,
போராட்டம் போராட்டம்
இதுமட்டுமே நிரந்தரம் !
கண்ணீருக்கு பஞ்சமில்லை
இங்க தண்ணீரும் மிச்சமில்லை !
இருந்தும் புதிதாய்
பிறக்கும் 2019 வருக !
........................

