நாங்களும் பசுமையுடன் வாழ்வோம் என்ற நம்பிக்கையில்

இதோ போகும் வழி!
வளிகடந்த வருநர் பெற்ற
வலியிடத்து பெறுநர்
வெந்தளர் நிலமும் வெறுமண்
வேட்க்கை பாரிலிரல் பங்கு
வெறுமை கனமும் நீந்துயர்
கொடுங்கோல் திடமும் தினம்
தினம் பிணந்தின்னும் மறமும்
மறந்தார் மதியிலந்து அரண்
காக்க மீதமிருக்க வந்த வழி
எவ்வழி யோ நீ போ!
பதாகை நிழல்லவே நிலம் நீ
பாதைமாறீ பற்றீசல் கொள்
அல்லவே உம் பாதம்
பதியும்முன் பாடையேற்றம் உன்
நாடி யேறும்,
பாதைமாறீ வந்த வழி நீ
நான் காணவண் காணாமல்
கரைந்து போ .... போய்விடு!
வெட்டித்தரித்த வரிக்கோடுகளாய்
வெந்தனல் வெதும்பி
வீசும்காற்றும் மாசுகொண்டது,
பசும்புல்லும் பசலையானது
மேதிலை பேச்சும் மீதிலை மூச்சும்
தட்டுப் பாடானது,
கட்டுப்பாற் றட்ட கயவர்கூடம்
களிப்புற எதிர்ப்பலை
அழையுற ஏங்கினோம் வந்த
தடம் தடைபுறள தறிதோடு
தறித்தோடு ... விழி பிதுங்க
நாணமுற நீ ஓடு! நீ யோடு!

எழுதியவர் : ச. சோலைராஜ் (31-Dec-18, 1:50 pm)
சேர்த்தது : ச சோலை ராஜ்
பார்வை : 216

மேலே