புத்தாண்டு வாழ்த்துகள் 2019
ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் - #2019
-----------------------
முடிகின்ற ஆண்டிற்கு விடைகொடுத்து
வருகின்ற புத்தாண்டை வரவேற்போம் !
முடிந்த நிகழ்வுகளை ஒருங்கிணைத்து
கடந்ததை ஒருகணம் நினைத்திடுவோம் !
சோகங்களின் நிழலைப் பார்க்காமல்
சுகம்தந்த தருணங்களை உணர்வோம் !
துக்கங்களின் சுமையை இறக்கிவிட்டு
மகிழ்ந்திருந்த நினைவுகளை சுமப்போம் !
பிரிவுகளின் வலியை பின்னுக்குத்தள்ளி
வரும்நாளில் வசந்தம் காண்போம் !
இழந்ததையும் துறந்ததையும் மறந்து
இன்பத்தின் நுழைவாயிலை அடைவோம் !
சாதிமத வெறித்தனத்தை தூக்கியெறிந்து
சமதர்ம சமுதாயமாக வாழ்ந்திடுவோம் !
பகுத்தறியும் பாதையில் பண்புகாத்து
வகுத்தறியும் வாழ்வில் பயணிப்போம் !
இல்லாமை பொல்லாமை கல்லாமை
இல்லாநிலை நிலைக்க செய்வோம் !
அன்னைத் தமிழைப் போற்றிடுவோம்
அகிலத்தில் தமிழால் இணைந்திருப்போம் !
நலம்வளம் என்றும் நம்முடன்
வலம்வர வையத்தில் வாழ்வோம் !
அமைதியும் ஆனந்தமும் நிலைத்து
இன்பமுடன் அனைவரும் வாழ்வோம் !
நண்பர்கள் அனைவருக்கும்
எனது இதயம் நிறைந்த
ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் !
பழனி குமார்
31.12.2018