தன்னம்பிக்கை போராளி

தன்னம்பிக்கை போராளி

அன்பெனும் ஆயுதம் கொண்டு
ஆயிரம் முறை
வதம் செய்யப்பட்ட
பெண்மை ...

சில நேரம் வாடி
பல நேரம் வாழ்ந்து
முடிவே இன்றி நொந்து சாகும்
மென்மை...

யதார்த்த வாழ்விலும்
இலக்கிய வடிவாய்
இல்லறம் அதில்
நல்லறம் செய்யும்
மேன்மை...

முதன்மைப்படுத்தப்பட்டு
பின் முற்றிலும்
முடக்கப்பட்டு
வஞ்சிக்கப்படும்
பெண்ணின்
வலிமை...

தன்னலம் கருதாமல்
தனை வருத்தி
மனை காக்கும்
எளிமையே உருவான
தாய்மை...

உலகத்தின்
உன்னதமான
ஆதாரமல்லவோ
ஆணிவேராய் தாங்கும்
உண்மை...

வார்த்தையில் மட்டுமல்ல
வாய்மையிலும்
வாழ்க்கையிலும்
தன்னம்பிக்கை
போராளி தான்
பெண்மை...

எழுதியவர் : பர்வின்.ஹமீட் (31-Dec-18, 4:06 pm)
பார்வை : 1437

மேலே