கனவு மெய்ப்பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும்
ஏன் எதற்கு எப்படி என்ற கேள்வியை எல்லோரும் கேட்க வேண்டும்
நம் நாட்டின் கடைக்குழந்தையும் கல்வி கற்க வேண்டும்
கல்லாதவர்களே இல்லை என்ற நிலை உருவாக வேண்டும்
ஏழை பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வுகளை உடைத்து பொதுவுடைமை என்பதை புதிதாக்க வேண்டும்
சாதி மத பேதைகளையெல்லாம் எரித்துவிட்டு
இந்தியன் என்ற ஒன்றிலே அனைவரும் இணைந்திருக்க வேண்டும்
கற்றறிந்த தொலைநோக்கு சிந்தனை உடையவர்கள் ஆட்சியில் அமர வேண்டும்
உலகிலேயே நம் நாட்டை உயர்ந்த நாட்டாக மாற்ற வேண்டும்
மாபெரும் மனிதர் தத்துவமேதை நம் அப்துல்கலாம் ஐயாவின் கனவை நிறைவேற்ற வேண்டும்
இளைஞர் கூட்டமே எழுந்து வா
நம் தாய்திருநாட்டை உயர்த்துவது தரணியில் நம் கடமை அல்லவா
இந்தியாவை வல்லரசாக்க ஒற்றுமையாய் இருந்து உழைப்போம்
ஓவ்வொருவரின் கனவும் இதுவென்று உறுதியோடு போராடுவோம்
ஒரு நாளில் இந்தியா வல்லரசாகும் - அன்றே
நம் தாய் திரு நாடு வாழ்க
இந்திய திரு நாடு வாழ்க வாழ்கவே
என்று இன்னிசையால் பாடி மகிழ்வோம்!!!