அக்னி குஞ்சென்று கண்டேன்
ஆண் பெண் என்ற சாதியே போதும் - அதில்
மேலோர் கீழோர் என்னும் சாதி எதற்க்கு
சாதி என்னும் அக்னி குஞ்சை சமத்துவ தீயினால் எரித்திட வேண்டும்
உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்றில்லாமல் நாம் அனைவரும் ஒன்றாய் உறவாட வேண்டும்
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற சொல்லுக்கு உயிர் கொடுக்க வேண்டும்
தன் சாதிதான் பெரிது என்று சண்டையிடுபவர்களுக்கெல்லாம்
நீ கும்பிடும் கடவுளின் சாதி என்னவென்று கேள்வி எழுப்புவோம்
சாதி மத வெறியர்கள் எல்லாரிடத்திலும் உன் உதிரத்தின் நிறமென்ன என்று கேட்போம்
உன் உதிரமும் சிகப்பு நீ கீழோராய் என்னும் மனிதரின் உதிரமும் சிகப்பு என்போம்
ஒவ்வொருவரின் உருவம் வேறுதான் ஆனால் உதிரத்தின் நிறம் ஒன்றுதான் என்பதை உணர வைப்போம்
ஆயிரம் அறிவுரைகளை கூறினாலும் சில சாதிவெறியர்கள் திருந்தாவிட்டால்
சமத்துவ மக்கள் எல்லாம் ஒன்றிணைந்து சாதிவெறியர்களை அக்னியால் சுட்டெரிப்போம்
அப்பொழுதாவது புரியட்டும் அனைவரும் ஒரே இனம் என்று
அடுத்து வரும் சந்ததிகளாவது சமத்துவமாய் வாழ்ந்து மகிழ்ந்திருக்கட்டும்!!!